ஸ்ரீமதே ரங்க ராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ: ஸ்ரீமதே வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம: ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹா தேசிகாய நம: தாஸஸ்ய விக்ஞாபனம். அடியவர்க்கு எளியனான எம்பெருமான் தன் ஸங்கல்பத்தாலே பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருந்தாலும் அவை மேலும் ஏற்றம் பெறுவது ஆச்சார்யர்களின் அவதாரத்தாலே என்பது பெரியோர்களின் வாக்கு. சோழ நாட்டு திவ்யதேசமான தேரழுந்தூரில் அவதரித்ததனால் ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவன் எனவும் சிஷ்யர்களிடத்தில் அபரிமிதமான கருணையுடன் விளங்கியதால் ஸ்ரீமத் நம்மாண்டவன் எனவும் ப்ரசித்தி பெற்ற ஸ்ரீமத் ஆண்டவனின் பெருமை அளவிடற்கரியது. வருகிற 12/09/11 திங்கள் அன்று ஸ்ரீமத் நம்மாண்டவனின் திருநக்ஷத்ரம் ஆவணிப் பூரட்டாதி தேரழுந்தூர் திவ்ய தேசத்தில் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் 23 வது சாதுர் மாஸ்ய ஸங்கல்பம் அனுஷ்டிக்கும் சந்தர்பத்தில் மிகவும் விசேஷமாக உபய வேத பாராயணங்களுடனும் ஸ்ரீபெருமாள், தாயார், ஆழ்வார், ஸ்வாமி தேசிகன் திருமஞ்சனதுடனும் ஸ்ரீமத் ஆண்டவன் மங்களாசாஸனத்துடன் கொண்டாடப்படவிருக்கிறது. அனைவரும் எழுந்தருளியிருந்து ஸ்ரீமத் ஆண்டவன் க்ருபைக்கு பாத்ரராகும் படி ப்ரார்த்திக்கிறோம். சித்ரகூடம் ரங்க நாதன். |
No comments:
Post a Comment