Monday, August 29, 2011

Mysore Andavan Vaazhi Tirunaamam & Mangala slokam

Sreemathe Ranga Ramanuja Mahadesikaya Namaha

In connection with 103rd Tirunakshatram of Srimath Srinivasa Ramanuja Mahadesikan, Srimath Mysore Andavan, please find below His Vaazhi Tirunaamam & Mangala slokam

மைசூர் ஆண்டவன் வாழித் திருநாமம்


श्रीनिवास दयापात्रं श्रीपतिन्यस्त चेतसम्।

श्रीवास लक्ष्मणाख्यं तं देशिकेन्द्रमुपास्महे॥


ஸ்ரீநிவாஸ தயா பாத்ரம் ஸ்ரீபதிந்யஸ்த சேதஸம்|

ஸ்ரீவாஸ லக்ஷ்மணாக்யம் தம் தேசிகேந்த்ரமுபாஸ்மஹே||


வாழி எதிராசன் மாதகவால் வையமெல்லாம்

வாழி ஸ்ரீவாஸ ராமானுசனும் வாழியவன்

வடகலையும் மன்கலையும் வண்மையுற வாழவைக்கும்

திடமுடனே தந்தருளும் சீர்.


வேதத்தின் முடியதனை விளங்க வைத்தான் வாழியே

வண்ணமிகு கண்ணனையே வணங்கி நின்றான் வாழியே

வேதாந்த வாரியர் போல் விளங்கியவன் வாழியே

வினயத்தின் விளக்கமென வாழ்ந்திருந்தான் வாழியே

தீத்ற்ற தொல் பொருளைத் தந்தருள்வோன் வாழியே

தெவிட்டாத கவியமுதம் தனையீந்தான் வாழியே

கோதில் புகழ் நிறைந்த குருவானான் வாழியே

மேதினியில் ஸ்ரீநிவாஸ முனிவர் கோன் வாழியே


வாழி எதிராசன் மாதகவால் மாநிலமும்

வாழிய வேதாந்ததேசிகனடிகள் வாழியவே

மன்னுசீர் சீவாஸராமானுச முனிவ! நீர்

இன்னுமொரு நூற்றாண்டிரும்.


திருநாள் பாட்டு


மேதினி மீது யதீந்திரன் தம்மருளீண்டென மீண்டிடுநாள்

மாசறுசோதி மயக்கமறுந்திட மண்ணிடை வந்திடுநாள்

தீதறு தேசிகர் நல்லுரை ஓர்ந்திடத் தேசமுயர்ந்திடுநாள்

தேவரும் மானிடராக அவாவுறு தேசு நிறைந்திடுநாள்

ஓதரும் வேதமனைத்து முரைத்திடுமோரொளி தோன்றியநாள்

வேதமுடிப் பேராசிரியன் பினும் வாழ்ந்திட வந்திடுநாள்

மேதகு சீர் சீர்வாஸ யதீந்திரர் மேதினி தோன்றிய நாள்

ஆசறு மாவணித் திங்களமைந்த தோருத்திரத் திருநாளே.



 

No comments:

Post a Comment