Saturday, August 18, 2012

 ஸ்ரீமதே ரங்க ராமானுஜ மஹா தேசிகாய நம ;

--ஆழ்வார் திருநகரிக்கு பல பெருமைகள் உண்டு , ஆழ்வார்கள் அனுக்ராஹதால் வடக்கு ரத வீதியில் அமைத்துள்ள ஆண்டவன் ஆஸ்ரம் பெருமை சொல்லி மாளாது .எல்லாரும் போய் அனுபவிக்க வேண்டிய இடம்.
அங்குள்ள மேனேஜர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச தாத்தம் சுவாமிகள் மிக அன்போடு எல்லா வசதிகளும் செய்து தருகிறார் . நல்ல சுத்தமான சூழ்நிலையில் அமைத்துள்ள பெரிய அறைகள் ,வயது ஆனவர்களுக்கு ஏற்ப தங்கும் கட்டில் வசதிகள்
குளிக்க வெந்நீர், western toilets வசதி நிறைய மின் வசதிகள் இன்னும் என்ன வேணும் நகர வாசிகளுக்கு .
ஆஸ்ரமதிற்கு அருகில் தாமிரபரணி ஓடுவதால் அந்த ஸ்நான பலனையும் பெறலாம்
நவ திருப்திகள் சேவிக்க வசதிக்கு ஏற்ப கார், ஆட்டோ ,மினிவான்,வசதி செய்து தருவதோடு மட்டுமல்ல அவர்கள் அவர்கள் சொல்லும் ஸ்தல குறிப்புகளை கேழ்கும் போது திவ்ய தேச பெருமைகள் மணக்கிறது,
ஆஸ்ரமதிற்கு அருகிலேயே காபி டிபன்,, போ ஜனம் வைஷ்ணவா மூலம் தயாரிக்க பட்டு சுட சுட கிடைகிறது ,என்ன புறப்பட்டச்சா ஒரு நிமிஷம் ,இங்கேயே மனம் நிறைந்து விட்டால் எபபடி //////
நேரே மதுரைக்கு போய சாத்தூர் மாசம் ஸ்ரீமத் ஆண்டவனிடம் நாம் பெற்ற இன்பத்தை சொல்லி
திருவடி சேவித்து வரல்லாமே . இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும் இந்த ஜென்மத்திற்கு .

இதேபோல் உப்பிலியப்பன் கோவில்லில் உள்ள ஆண்டவன் ஆஸ்ரமத்தில் அனுப்பும் கார் ஓட்டுனர் ஒருவர் சமிபத்தில் எங்களை ஆச்சர்ய படுத்திவிட்டார் .அவரை ஆழ்வார்கள் அனுப்பிய தூதர் என்றே சொல்லலாம்.
போன வாரம் புதியதாக வந்த வெளிநாட்டு ஸ்ரீவைஷ்ணவ தம்பதிகளை பத்து திவ்ய தேசங்களை சேவிக்க அழைத்து சென்றார் அந்த ஓட்டுனர் ,சேவிச்சவா சொன்ன கருத்து என்னை ஆச்சர்ய பட வைத்தது ;
"இவன் தெரிந்து வைத்துள்ள அளவுகூட எனக்கு தெரியாதது என்னை தலை குனிய வைத்தது யோசிக்க வைத்தது.. , சாமி இனி இந்த மாதிரி கோவில்களும் வராது ,
ஆ ழ்வார்கள் பாசுரங்களும் கிடைக்காது ,இந்த ஜென்மம் புண்ணியம் பண்ணியது என்றான் '"அதோடு மட்டுமல்ல எந்த வித பணம் ,காசு சாப்பாடு நம்மிடம் கேழ்பது இல்லை, நீங்கள் எல்லா நிறைய வந்து சேவிக்கணும் , நாங்க கார்லே கூட்டிண்டு போய் சேவை பண்ணி வைக்கணும் இது ஆண்டவன் கட்டளை என்றான். கேட்டவுடன் பகவான் சாரதியாக வந்தானோ என ஆனந்த கண்ணீரை துடைத்தேன்

அத்தனை கோவில்களை பற்றிய பாசுரங்கள், எந்த காலம். எத்தனாவது திவ்ய தேசம் ஸ்தல புராணம் மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் ,பரிகார பலன் மற்றும் அந்த ஊர் சிறப்பு ,அது மட்டுமல்ல ஆச்சரகரளுக்கு கோவில்களில் சிறப்பு பிரசாதங்களுகும் ஏற்பாடு செய்து தருகிறார் .கையில் பிரபந்த புஸ்தகத்தை நமக்கு கொடுத்து படிச்சுண்டு வாங்கோ என்கிறார்
ஸ்ரீமத் ஆண்டவன் காருண்யம் எந்த அளவுக்கு போய்விட்டது என்பதா ஸ்ரீ ராமானுஜார் திருஅவதாரம் ஆயிரம் ஆண்டு நெருங்குவதால் எல்லாமே அவர் திரு உள்ளம் பாடி மணக்கிறது என்று சொல்லி இனி எந்த கவலையும் இன்றி எல்லாரும் எல்லாம் சேவித்து ஆண்டவன் ஆஸ்ரமத்தின் காருண்யத்தை அனுபவிக்குமாறு ஸ்ரீ ரங்க நாதா பாதுகை மூலம் தாழ்மையோடு
தங்கள் திருவடியில் விண்ணபிக்கேறேன்

ண்டவன் திருவடி சேவித்து சமர்பிக்கும்
வடுவூர் ஸ்ரீமதி மீரா வீரராகவன்
பெங்களுரு ,மல்லேஸ்வரம்
09379167856

No comments:

Post a Comment