Saturday, August 11, 2012

Sankalpam experience in Madurai Andavan Ashramam

ஸ்ரீமதே ரங்கராமனுஜ மகாதேசிகாயை நம;
ஆடியில் ஒரு ஆனந்த அனுபவம்
மதுரை வாசிகள் ஆண்டாள் திருனக்ஷற்றம் பார்த்து மூச்சு விடமுடியாது ஆனந்த வெள்ளத்தில் திணறுகையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மதுரையில் 24 வது சாதுர்மாஸ்ய சங்கல்ப வைபவம் பார்த்து இப்படியும் ஒரு ஆஸ்ரமம் இப்படியும் ஒரு ஆனந்த நிலை மதுரை வாசிகளுக்கு மட்டும்தானா என ஏங்க வைத்து விட்டது
ஓயாது மருந்து மாத்திரை என்று தவிப்பவர்களுக்கு ,அமைதியை தேடி காசுகொடுத்து வாங்குவர்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி
ஆசார்யன் எழுந்தருளி இருக்கும் இடம் பசுமையான இடம் தோப்பு, கல்கண்டு போன்ற
கிணற்று தண்ணி.வாசலில் வந்தவுடன் வாய் நிறைய அழைக்கும் ஆஸ்ரம கைங்கர்யால் , காண கிடைக்காத பசு மாடு கனுகுட்டிகள்
காலையில் சாற்று முறையில் காதுக்கு இனிய வேத கோஷத்துடன் ஸ்ரீபாத தீர்த்தங்களை சுவிகரிகும் போது உள்ளங்கை மட்டும் நனைவதில்லை ,உடலும் உள்ளமும் நனைந்து கண்ணில் நீர் பெருகி விடுகிறது .
தவித்தவனுக்கு தண்ணிக்கு பதில் இளநீரே கிடைத்தால் எபபடி குளிர்வான் அதுபோல ஸ்ரீமத் ஆண்டவன் திருமுக மண்டல புன்சிரிப்பு .பேசும் விதமும் நோய் வாய் பட்டவன் வைத்தியம் கேக்கும் போது அவர் சொல்லும் பாணியில் பாதி வலி போய் விடும்
சிரிப்புக்கு பஞ்சமே இல்லை ஒரு சொல்லுக்கு சொல் சிரிப்புதான் நாம் யோசித்து சிரிக்கும் முன்பே அடுத்த சிரிப்பு வெடி வருபவர்கள் அத்தனை பேரிடமும் கருணா மூர்த்தியாக அருள் பொழிந்து மூச்சே விடமுடியாத படி பிரசாதம அளித்து அனுப்பும் போது இந்த மோக்ஷமான மதுரை ஆஸ்ரமத்தை விட்டு வீட்டுக்கு போகணுமா என தோன்றும்
நான் மூன்று தினங்கள் போய் வந்த போது சிலரிடம் பேசும் வாய்பு கிடைத்ததில் அவர்கள் சொல்லி யது இவ்வச்ரமம் ஸ்ரீ கடாக்ஷம் நிரம்பிய இடம் ,அது மட்டுமல்ல இவரிடம் வந்து ஜ்ஹதகம் சேர்த்த வேளை சேவிக்க வந்த ஒருவரே எனக்கு சம்பந்தி ஆகும் பாக்கியம் பெற்றேன் என்று பெருமை பட்டாள்
மற்றும் ஒருவர் நான் பத்து தினங்களாக உள்ளேன் எனக்கு பத்து வருடமாக ஓயாத மிக்ரானே தலைவலி இங்கே வந்தது முதல் மாத்திரையை தொடவே இல்லை என்ற.
ஒரு பெரியவர் எனக்கு கண்ணே புகை படிஞ்ச மாதிரி இருந்தது இப்போ பளிச்சினு இருக்கு என்றார் ஆரோக்யமான இடமும் மனதுக்கு இனியனை சேவித்தால் ஏது வியாதி
என்ன மதுரை ஆஸ்ரமம் டிக்கெட் புக் பண்ண கிளம்பி ஆச்சா .
குழந்தை சிறுவர் முதல் பெரியவா வரை இந்த ஆனந்த சூழ்நிலை அனுபவிக்க வேண்டுகேறேன் .அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் கிளம்ப வேண்டும
இவ்விடம் ஊரில் இருந்து சற்று தள்ளி இருந்தாலும் ஆட்டோ வசதிகள் செய்து தந்து உள்ளார்கள் .அது மட்டுமல்ல பக்கத்தில் உள்ள கள்ளழகர், நுபுர கங்கை ஸ்ரீ ஆண்டாள் கோவில் . சேது சங்கல்பம் .நவதிருபதி ,ராமேஸ்வரம் ,திருமையம்
திருகோஷ்டியூர் எல்லாம் சேவிக்கலமே
,கரை படிந்து கலக்கத்தில் இருக்கும் நமது ஜென்மத்திற்கு ஆசார்யன் தரிசனம் கோடி புண்ணியம் தருவது மட்டுமல்ல காலம் எல்லாம் கைகொடுக்கும் கை விளக்கு ஆகும்

தாசன்
ஆசார்யன் திருவடியே சரணம்
வடுவூர் மீரா வீரராகவன்
mob no 9379167856

No comments:

Post a Comment